Sorry, you need to enable JavaScript to visit this website.

Skip to Main Content முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க Screen Reader ஸ்கிரீன் ரீடர் Unified Portal AIS SCHEME

Custom CSS

த.மி.நி பற்றி

தமிழ்நாடு மின்னணு நிறுவனம், இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் 21.03.1977 அன்று பதிவு செய்யப்பட்டு மாநிலத்தில் மின்னணுத் துறையை மேம்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஒரு தொழில் நிறுவனமாகும். மின்னணுவியல் துறையை மேம்படுத்தவும், மின்னணு பொதுத்துறை தெழில் நிறுவனம் அமைக்கவும், பெயலாக்கவும் மற்றும் மின்னணு தொடர்புடைய ஏனைய தொழில்கள் சார்ந்த வணிகம், வளர்ச்சியடைவதற்கும் ஏதுவாக மேலாண்மை மேற்பார்வை ஆலோசனை மற்றும் இணைந்து செயலாற்றுவதே நிறுவனத்தின் முக்கியநோக்கமாக இருக்கிறது

தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எல்கோசெஸ் (ELCOSEZ) என்று முத்திரைப் பெயராக அறிவித்ததன் மூலம், அவற்றை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் அது சார்ந்த சேவை வழங்கும் நிறுவனங்களின் முதவீடுகளுக்கான சிறந்த, உகந்த தேர்வாக உருவாக்கப் படுவதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது.

கொள்கைகள்:

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) என்பது தமிழ்நாடு அரசு நிறுவனமாகும், இது இந்திய நிறுவனங்கள் சட்டத்தின் (1956) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்காட் நிறுவனம் தமிழக அரசின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப திட்டங்களுக்கான விருப்ப கொள்முதல் முகமை ஆகும். தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப மாநிலமாக மாற்றும் ஒரு பெரிய தொலைநோக்குப்பார்வையுடன், எல்காட் மூன்று பரந்த துறைகளில் சிறந்து விளங்குகிறது, தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையை மேம்படுத்தவும், தமிழ்நாடு அரசாங்கத்திற்கான தகவல் தொழில்நுட்ப கொள்முதல் மற்றும் தமிழ்நாட்டிற்குள் சிறப்பான மின்னணு சேவைகளை வழங்கி வருகிறது.

எல்காட் இன் தற்போதைய செயல்பாடுகள்:

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த திட்டங்களை செயலாக்கவும் ஒரு விருப்ப கொள்முதல் நிறுவனமாக இயங்கி வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட / நடந்து கொண்டிருக்கும் திட்டங்கள், தேர்தல் புகைப்பட அடையாள அட்டை (EPIC) வாக்காளர்பட்டியல் தரவுத்தளத்தை உருவாக்குதல், மாநில மற்றும் மாவட்ட தலைமையகத்தில் காணொலிகாட்சி வசதி, காவல் கட்டுப்பாட்டுஅறை நவீனமயமாக்கல், மின்சாரவாரிய அழைப்பு மையம், 8 மில்லியன் குடும்ப அட்டைகள் உற்பத்தி, 8 மில்லியன் விவசாயிகள் அட்டைகள் உற்பத்தி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கணினி கல்வி, பதிவுத்துறையின் கணினி மயமாக்கல், நிலப்பதிவேடுகளை கணினிமயமாக்குதல், ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் வண்ண தொலைக்காட்சிகள் வாங்குதல் ஆகியவை இலவச வண்ண தொலைக்காட்சி திட்டத்தின் கீழ் ரூ.7500 மில்லியன் செலவில் (2006 தேதியிட்ட தகவல் எண்.22) அரசாங்கத்தின்.

அரசு துறைகள் / அமைப்புகள் / வாரியங்களுக்கான கணினி வன் பொருள் மற்றும் மென்பொருள் கொள்முதலுக்கான விருப்ப கொள்முதல் முகமையாக தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தை அரசாணை எண். (G.O.Ms.No.58 of FINANCE (BPE) DEPARTMENT தேதி:16.2.1999, கடிதம் எண்.624/ MIE.2/99-2, தேதி 21.10.1999) வாயிலாக அரசு அறிவித்தது, மற்றும் எல்காட் அரசாங்க துறைகள் / நிறுவனங்கள் / வாரியங்களின் தேவைகளை புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப சரியான தீர்வு மற்றும் பொருட்களை கொள்முதல் செய்து வழங்கி வருகிறது. அரசுத்துறைகள் குடிமக்களுக்கு வழங்கும் சேவைகளை மேம்படுத்தவும், துரிதமாக வழங்குவதற்கும், வெளிப்படைத் தன்மையுடன் வழங்குவதற்கும் முழுமையான தகவல் தொழில்நுட்ப தீர்விற்கான ஆதரவை வழங்கிவருகிறது.

அமைப்பு:

எல்காட், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை (தகவல் தொழில்நுட்பம்) கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது, தகவல் தொழில்நுட்பத் துறையின், அரசுச் செயலாளர், எல்காட் தலைவராகவும் செயல்படுகிறார். தமிழ்நாடு மின்னணு நிறுவனம், தமிழ்நாடு அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட இயக்குநர் குழுவைக் கொண்டுள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் மற்றும் நிர்வாக இயக்குநர் அவர்கள் அலுவலகத்தின் முகவரி:

  • 692, அண்ணாசாலை, MHU வளாகம்,
  • இரண்டாம் தளம், அண்ணாசாலை,
  • நந்தனம், சென்னை-600 035
Social Icons