Sorry, you need to enable JavaScript to visit this website.

ஓசூர் - மண்டலம்

news

நகரகண்ணோட்டம் - ஓசூர்

பெங்களூர், சென்னை, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி போன்ற முக்கிய தொழில் மையங்களுக்கு அருகில் ஓசூர் உள்ளது.

ஓசூரில் பல ஆட்டோ மொபைல் மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களின் மையமாக விளங்குகிறது.

இந்த நகரம் தகவல் தொழில்நுட்பத் தொழிலுக்கான வளர்ந்து வரும் மையமாகவும் உள்ளது, தற்போது நகரத்தின் எல்காட் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் ஒரே தகவல் தொழில் நுட்பப் பூங்காவாகும்.

நகர மக்கள்தொகை

1.16 MN

நகரப்பகுதி

72.41 sq.km

எழுத்தறிவு விகிதம்

87.4%

Hosur ELCOSEZ

முக்கிய சிறப்பம்சங்கள்

13வது தரவரிசை

5.38% வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் அதிவேக மக்கள் தொகை வளர்ச்சியைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் உலகின் 13 வது இடத்தில் உள்ளது.

தொழில்துறை மையம்

ஓசூர் ஒரு தொழில் துறை மையமாக உள்ளது மற்றும் பல ஆட்டோ மொபைல் மற்றும் உற்பத்தி தொழில்களைக் கொண்டுள்ளது.

2300 சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்கள்

2,300 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களைக் கொண்ட இந்தியாவின் முன்னணி தொழில்துறை மையங்களில் ஒன்று.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%

ஓசூர் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்த மாவட்ட உள்நாட்டு உற்பத்தியில் 3% பங்களிக்கிறது.

கனிம மூலங்கள்

சுண்ணாம்புகல், கலர்கிரானைட், கருப்புகிரானைட், கரடுமுரடான கல் போன்ற முக்கிய கனிமங்கள்.

14 பொறியியல் கல்லூரிகள்

ஓசூர் மற்றும் அதனைச் சுற்றி 14 பொறியியல் கல்லூரிகள் உள்ளது.

உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு

போக்குவரத்து முறை விவரங்கள்
பெருஞ்சாலை

முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள்,

தேசிய நெடுஞ்சாலை எண் 44 பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரியை இணைக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை எண் 648 ஓசூர்மற்றும் தொபாஸ் பேட்டையை இணைக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை எண் 844 ஓசூர்மற்றும் தருமபுரியை இணைக்கிறது.

ரயில் பெங்களூரு-சேலம் ரயில் பாதையில் ஓசூர் ரயில் நிலையம் உள்ளது. ஓசூர் மற்றும் பெங்களூரு இடையே அடிக்கடி பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
விமான நிலையம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், டால் விமான நிலையம் மற்றும் சேலம் விமான நிலையம் போன்ற 80 கி.மீ. சுற்றளவில் உள்ள மூன்று செயல்பாட்டு விமான நிலையங்கள்.

உத்தேச இயற்பொருள் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள்

  • சென்னை - சேலம் நெடுஞ்சாலை 277 கி.மீ. எட்டு வழிபசுமை வழிச்சாலையாக திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சென்னை- சேலம் இடையேயான பயண நேரத்தை பாதியாகக் குறைக்கும் நோக்கம் கொண்டது.
  • சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு என்பது பெங்களூரைச் சுற்றியுள்ள துணை நகரங்களை இணைக்கும் 6 வழி 204 கி.மீ. வட்டச்சாலையாகும். தமிழ்நாட்டின் 45 கி.மீ. தொழில் நகரமான ஓசூரை இணைக்கிறது.
  • பெங்களூர் - சென்னை தொழில்துறை வழித்தடம், சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் வகையில் 4 வழி 262 கி.மீ. பசுமை விரைவுச்சாலை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • சேட்டிலைட் டவுன் ரிங்ரோடு - பெங்களூரைச் சுற்றியுள்ள துணை நகரங்களை இணைக்கும் 6 வழி 204 கி.மீ. ரிங் ரோடு மற்றும் தமிழ்நாட்டின் 45 கி.மீ. தொழில் நகரமான ஓசூரை இணைக்கும் வட்டச்சாலை - தொழில் நகரங்களிலிருந்து சரக்குக் கிடங்கிற்கு நகருக்குள் நுழையாமல் சரக்குகளை தடையின்றி எடுத்துச் செல்ல முடியும்.

ரியல் எஸ்டேட் விலை நிர்ணயம்

CBD & பிற பிராந்தியங்கள் – INR 3,000 – 3,700 / சதுரஅடி

வரையறுக்கப்பட்ட அலுவலக இட வளர்ச்சிகள்

பட்டியல் விவரங்கள்
இட அமைவு விஸ்வநாதபுரம்
பரப்பளவு 174.47 ஏக்கர்
முதலீடு 85 கோடி ரூபாய்
கட்டமைக்கப்பட்ட பகுதி 62,100 சதுரஅடி
99 வருட குத்தகைக்கான காணி செலவு 1.10 கோடி ரூபாய்/ஏக்கர்
வார்ம்ஷெல் இடத்திற்கான மாதாந்திர வாடகைக் கட்டணம் சதுர அடிக்கு 17.36 ரூபாய் + பொருந்தக் கூடிய பராமரிப்புக் கட்டணங்கள்.
முக்கிய குத்தகைதாரர்கள் யு எஸ் டெக்னாலஜி இன்டர்நேஷனல், சந்து சோஃப்ட் டெக்னாலஜிஸ், தென்றல் இன்ஃபோடெக்.
குத்தகைதாரர்கள் சுயவிவரம் மென்பொருள் மேம்பாடு, வணிக செயல்முறை, மேலாண்மை சேவைகள் மற்றும் தீர்வுகள்.

 

ஓசூர் ஐடி பார்க் பற்றிய புகைப்படங்கள்

 

Social Icons