Custom CSS
கோயம்புத்தூர் - மண்டலம்
கோயம்புத்தூர் நகரம் முன்னோட்டம்
தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களை ஒருங்கிணைப்பதில் சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் 2-வது இடத்தில் உள்ளது. கோயம்புத்தூரின் முக்கிய தொழில் ஜவுளி உற்பத்தி ஆகும். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி இயந்திரங்களில் 80% இயந்திரங்கள் கோயம்புத்தூரில் உற்பத்தி செய்யப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகள் வழங்கும் நிறுவனங்களை ஈர்ப்பதில் கோயம்புத்தூர் இரண்டாம் நிலை நகரங்களில் முக்கிய நகரமாக பங்கு வகிக்கிறது.
நகர மக்கள் தொகை
3.45 மில்லியன்
மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம்
19.06%
நகர பரப்பளவு
246.8 ச.கி.மீ
எழுத்தறிவு விகிதம்
83.98%
Coimbatore ELCOSEZ
Key Highlights
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
தமிழ்நாட்டின் மொத்த நூல் உற்பத்தியில் 20% பங்களிப்பு மற்றும் ஏராளமான ஜவுளித் தொழிற்சாலைகள் உள்ள நகரம்.
2-வது பெரிய நகரம்
தமிழ்நாட்டில் நகர்புறங்களை ஒருங்கிணைப்பதில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரமாக கோயம்புத்தூர் உள்ளது.
தொழில்துறை செயல்பாடு
ஜவுளி இயந்திரங்கள் உற்பத்தி, பொது பொறியியல் மற்றும் தானியங்கி வாகனம் உதிரிபாகங்கள் உற்பத்தி போன்ற பல்வேறு பன்முக தொழில்துறை செயல்பாடுகளைக் கொண்டது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6%
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கோயம்புத்தூர் மாவட்டம் 6% பங்களிக்கிறது.
தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள்
2000 பிற்பகுதியிலும் தற்போதும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் அதிகம் காணப்படுகிறது.
கல்வி உள்கட்டமைப்பு
திறமையான தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களை உருவாக்குவதற்கான மையமாக கோயம்புத்தூர் திகழ்கிறது. அதிக அளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி இருப்பதே இதற்கு காரணம்.
பொறியியல் கல்லூரிகள் - 67
உள்கட்டமைப்பு மற்றும் தொடர்பு
போக்குவரத்து முறை | விவரங்கள் |
---|---|
சாலை |
நகரத்தில் ஆறு பிரதான சாலைகளும், மூன்று தேசிய நெடுஞ்சாலைகளும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை- 47 (கன்னியாகுமரி-சேலம்) தேசிய நெடுஞ்சாலை- 67 மைசூர் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை- 209 பெங்களூரு-திண்டுக்கல் |
தொடர்வண்டி | தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக போக்குவரத்து மிகுந்த இரயில் நிலையம் கோயம்புத்தூர். இது தமிழ்நாடு மற்றும் பிறமாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுடன் கோயம்புத்தூரை இணைக்கிறது. |
வான் வழி | கோயம்புத்தூர் விமான நிலையம் நகர மையத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூ ர் விமானநிலையம் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பரபரப்பான விமான நிலையம் ஆகும். இது சிறந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச இணைப்புகளைக் கொண்டது. |
முன்மொழியப்பட்ட உள்கட்டமைப்பு
- வளர்ந்து வரும் தேவைக்கேற்ப கோயம்புத்தூர் விமானநிலையத்தில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதல் முனையம் மற்றும் 20 பாலங்கள் விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- கோயம்புத்தூரிலிருந்து கரூக்கு 182.5 கி.மீ தூரத்திற்கு பசுமை சாலைத் திட்டம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் முன்மொழியப்பட்டுள்ளது.
- ரூபாய். 7200 கோடி முதலீட்டில் தொழில்துறை பகுதிகள் மற்றும் பிற உள்நாடுகளை இணைக்கும் வகையில், திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள கனரக தொழிற்சாலைகளை மையமாகக் கொண்டு, கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் உற்பத்தி மற்றும் வணிக முதலீட்டு மண்டலமாக கோயம்புத்தூர் சேலம் தொழிற்பேட்டை முன்மொழியப்பட்டுள்ளது.
- ரூபாய் 4800 கோடி முதலீட்டில் கோயம்புத்தூர்-சேலம் தொழில்துறை வழித்தடமும் ஒரு வேளாண் வணிக முதலீட்டு மண்டலமாக (ABIR) முன்மொழியப்பட்டுள்ளது.
- கோயம்புத்தூர் - மதுரை தொழில்துறை வழித்தடம் மற்றும் செங்கல்பட்டு - கோவை மற்றும் தூத்துக்குடி இடையே முன்மொழியப்பட்ட முக்கோண வழித்தடங்கள் அதிக முதலீடுகளையும் வேலைவாய்ப்பையும் கொண்டு வரும்.
- சென்னை-கோயம்புத்தூர்-மதுரை மற்றும் தொழில்துறை நிறுவனங்களை இணைக்கும் அதிவேக சரக்கு ரயில் மற்றும் மூலப்பொருட்களின் போக்குவரத்தை எளிதாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது நகரமயமாக்கலின் உயர் விகிதத்தை தூண்டுகிறது
அளவுருக்கள் | விவரங்கள் |
---|---|
இடம் | விளாங்குறிச்சி |
பரப்பு | 61.59 ஏக்கர் |
முக்கிய குத்தகைதாரர்கள் | விப்ரோ மற்றும் டைடல் பார்க் |
குத்தகைதாரர் சுயவிவரம் | மென்பொருள் மேம்பாடு, பராமரிப்பு மற்றும் சோதனை, ஆலோசனை மற்றும் வணிக செயல்முறை அவுட்சோர்சிங் |
முக்கிய நன்மை |
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டடுக்கு நகரங்களில் ஒன்று. மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்களை கோயம்புத்தூருடன் இணைப்பதில் சிறந்து விளங்குகிறது. மற்ற மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடுகையில் கோயம்புத்தூரில் திறமையான மனிதவளம் கிடைக்கிறது. |
வரவிருக்கிறது | 2.66 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப கட்டிட பணி நடந்து வருகிறது |